திருகோணமலை, அலெக்ஸ் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
திருகோணமலை 6ம் கட்டைப் பகுதியில் நடமாடும் பஞ்சர் ஒட்டும் சேவையை வழங்கி வருபவரின் முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின்போது முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயங்களுக்குள்ளாகினர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்றதற்கான காரணம் குறித்து திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையில் முச்சக்கரவண்டி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம் திருகோணமலை, அலெக்ஸ் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து தெரியவருவதாவது,திருகோணமலை 6ம் கட்டைப் பகுதியில் நடமாடும் பஞ்சர் ஒட்டும் சேவையை வழங்கி வருபவரின் முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின்போது முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயங்களுக்குள்ளாகினர்.காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து இடம்பெற்றதற்கான காரணம் குறித்து திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.