கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா புதன்கிழமை (18) இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பல்லின சமூகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் அவரவர் பண்பாட்டு நிகழ்வுகளை எவ்வித வேறுபாடுமின்றி, காலா காலமாக ஒற்றுமையுடனும் சிறப்பாகவும் இங்கு நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே, இந்த ஒளி விழாவும் இம்முறை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய நிகழ்வில் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு, நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கிய, சிறுவர் சிறுமிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளினால், நத்தார் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஒளி விழா கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா புதன்கிழமை (18) இடம்பெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பல்லின சமூகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் அவரவர் பண்பாட்டு நிகழ்வுகளை எவ்வித வேறுபாடுமின்றி, காலா காலமாக ஒற்றுமையுடனும் சிறப்பாகவும் இங்கு நிறைவேற்றி வருகின்றனர்.இந்த நிலையிலேயே, இந்த ஒளி விழாவும் இம்முறை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இன்றைய நிகழ்வில் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு, நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கிய, சிறுவர் சிறுமிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளினால், நத்தார் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டனர்.