• Nov 25 2024

இலங்கையர்களுக்கு ஜனவரி முதல் சிக்கல்..! இரண்டு வழிகளில் அதிகரிக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை...!

Chithra / Dec 17th 2023, 7:31 am
image


  

ஜனவரி முதலாம் திகதி முதல் தற்போதுள்ள VAT அதிகரிப்பால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை இரண்டு வழிகளில் அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக ஒட்டுமொத்த பணவீக்கம் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அரசாங்கம் கணித்துள்ளது. 

அதற்கமைய, VAT அதிகரிப்புடன் உடன் ஒப்பிடும்போது அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டண அதிகரிப்பு அதிகமாக உள்ளது. 

மேலும் மருந்துகள், கோதுமை மாவு, குழந்தை பால் மா போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை. 

எனினும் பெற்றோல், டீசல் 60 ரூபாவினால் அதிகரிப்பதால், போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பினால் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.

மின்சாரக் கட்டணத்திற்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், டீசல் மூலம் உற்பத்தி செய்யப்படும் போது மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களுக்கு ஜனவரி முதல் சிக்கல். இரண்டு வழிகளில் அதிகரிக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை.   ஜனவரி முதலாம் திகதி முதல் தற்போதுள்ள VAT அதிகரிப்பால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை இரண்டு வழிகளில் அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஒட்டுமொத்த பணவீக்கம் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அரசாங்கம் கணித்துள்ளது. அதற்கமைய, VAT அதிகரிப்புடன் உடன் ஒப்பிடும்போது அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டண அதிகரிப்பு அதிகமாக உள்ளது. மேலும் மருந்துகள், கோதுமை மாவு, குழந்தை பால் மா போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை. எனினும் பெற்றோல், டீசல் 60 ரூபாவினால் அதிகரிப்பதால், போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பினால் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.மின்சாரக் கட்டணத்திற்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், டீசல் மூலம் உற்பத்தி செய்யப்படும் போது மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement