டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக நாளை (06) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தொடரின் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக பங்களாதேஷ்அணியின் வீரர்கள் பலர் நேற்றைய பயிற்சியில் பங்கேற்கவில்லை.
நேற்றைய தினம் 08 பங்களாதேஷ் வீரர்கள் மாத்திரமே பயிற்சிக்காக வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க கூறுகையில், மோசமான காசு மாசுபாட்டை கருத்தில் கொண்டு பங்களாதேஷ் வீரர்கள் தங்கள் உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், டெல்லியில் நிலவும் காற்றுச்சூழல் ஆட்டத்தை மேலும் பாதிக்கும் என சந்திக ஹத்துருசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை - பங்களாதேஷ் போட்டியில் சிக்கல் samugammedia டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக நாளை (06) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தொடரின் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக பங்களாதேஷ்அணியின் வீரர்கள் பலர் நேற்றைய பயிற்சியில் பங்கேற்கவில்லை.நேற்றைய தினம் 08 பங்களாதேஷ் வீரர்கள் மாத்திரமே பயிற்சிக்காக வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க கூறுகையில், மோசமான காசு மாசுபாட்டை கருத்தில் கொண்டு பங்களாதேஷ் வீரர்கள் தங்கள் உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.எவ்வாறாயினும், டெல்லியில் நிலவும் காற்றுச்சூழல் ஆட்டத்தை மேலும் பாதிக்கும் என சந்திக ஹத்துருசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.