• Mar 15 2025

பார ஊர்தியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; கிளிநொச்சியில் இளைஞன் பலி

Chithra / Mar 15th 2025, 1:15 pm
image


கிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பளை கரந்தாய் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பளை வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

குறித்த விபத்தானது நேற்று நள்ளிரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பார ஊர்தியும் கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.

இச்சம்பவத்தின் தொடர்புடைய பார ஊர்தியின் சாரதி பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்


பார ஊர்தியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; கிளிநொச்சியில் இளைஞன் பலி கிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பளை கரந்தாய் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பளை வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்குறித்த விபத்தானது நேற்று நள்ளிரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பார ஊர்தியும் கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.இச்சம்பவத்தின் தொடர்புடைய பார ஊர்தியின் சாரதி பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement