• Jan 16 2025

கால்நடைகளை கடத்தி செல்ல முற்பட்ட பார ஊர்தி பொதுமக்களால் மடக்கி பிடிப்பு

Chithra / Jan 8th 2025, 7:47 am
image

 

முல்லைத்தீவில்  கால்நடைகளை கடத்தி செல்ல முற்பட்ட பார ஊர்தி ஒன்று பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம், நேற்று  இடம்பெற்றுள்ளது. 

முல்லைத்தீவு - மல்லாவி பகுதிகளிலிருந்து அதிக கால்நடைகள் அண்மைய காலங்களில் காணாமல் போவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இந்த நிலையில் நேற்று மல்லாவி - கல்விளான் பகுதியிலிருந்து பார ஊர்தி ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட கால்நடைகளை, பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தியதோடு மல்லாவி பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர். 

குறித்த பகுதிக்கு வருகை தந்த மல்லாவி பொலிஸார் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் அவர்களிடம் இல்லாததினால் பாரவூர்த்தியை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றதுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை, சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


கால்நடைகளை கடத்தி செல்ல முற்பட்ட பார ஊர்தி பொதுமக்களால் மடக்கி பிடிப்பு  முல்லைத்தீவில்  கால்நடைகளை கடத்தி செல்ல முற்பட்ட பார ஊர்தி ஒன்று பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், நேற்று  இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - மல்லாவி பகுதிகளிலிருந்து அதிக கால்நடைகள் அண்மைய காலங்களில் காணாமல் போவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மல்லாவி - கல்விளான் பகுதியிலிருந்து பார ஊர்தி ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட கால்நடைகளை, பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தியதோடு மல்லாவி பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர். குறித்த பகுதிக்கு வருகை தந்த மல்லாவி பொலிஸார் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் அவர்களிடம் இல்லாததினால் பாரவூர்த்தியை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றதுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement