• Nov 24 2024

மட்டக்களப்பில் இடம்பெற்ற சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வு...!samugammedia

Sharmi / Dec 26th 2023, 2:07 pm
image

சுனாமி ஏற்பட்டு 19ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் , அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட மட்டக்களப்பு திருச்செந்தூர், டச்பார்,புதுமுகத்துவாரம்,நாவலடி ஆகிய பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்கள் நடைபெற்றன.

திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் உறவுகளின் கண்ணீருடன் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

கிறிஸ்தவ முறைப்படி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்று ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உறவுகள் அஞ்சலி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்னம், முன்னாள் மாநகரசபையின் பிரதி முதல்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று டச்பார் வீதியில் உள்ள சுனாமி ஞாபகார்த்த நினைவுத்தூபியில் அருட்தந்தை லோரன்ஸ் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கலந்துகொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் புதுமுகத்துவாரம் பகுதியில் இந்து மத வழிபாட்டு முறைகளுக்கு அமைவாக சுனாமி அனர்த்ததினால் உயிர்நீர்த்தவர்களுக்கு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்கு பூஜைகள் நடைபெற்று கடலில் அவர்களுக்கான பிராயசித்தம் செய்யப்பட்டது.

இப்பகுதிகளில் சுனாமி அனர்த்தம் காரணமாக 1800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் பல கோடி ரூபா சொத்துகள் இழக்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வு.samugammedia சுனாமி ஏற்பட்டு 19ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் , அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட மட்டக்களப்பு திருச்செந்தூர், டச்பார்,புதுமுகத்துவாரம்,நாவலடி ஆகிய பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்கள் நடைபெற்றன.திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் உறவுகளின் கண்ணீருடன் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.கிறிஸ்தவ முறைப்படி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்று ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உறவுகள் அஞ்சலி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்னம், முன்னாள் மாநகரசபையின் பிரதி முதல்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதேபோன்று டச்பார் வீதியில் உள்ள சுனாமி ஞாபகார்த்த நினைவுத்தூபியில் அருட்தந்தை லோரன்ஸ் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கலந்துகொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.அத்துடன் புதுமுகத்துவாரம் பகுதியில் இந்து மத வழிபாட்டு முறைகளுக்கு அமைவாக சுனாமி அனர்த்ததினால் உயிர்நீர்த்தவர்களுக்கு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.இதன்போது சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்கு பூஜைகள் நடைபெற்று கடலில் அவர்களுக்கான பிராயசித்தம் செய்யப்பட்டது.இப்பகுதிகளில் சுனாமி அனர்த்தம் காரணமாக 1800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் பல கோடி ரூபா சொத்துகள் இழக்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement