சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த அனர்த்தம் காரணமாக உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று (26) கல்முனைப் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் மெளலவி ஷபானிஸ் தலைமையில் உயிரிழந்தவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.
சாய்ந்தமருது ஜும் ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் சுஹதா, பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாசல் மற்றும் மாளிகைக்காடு பள்ளிவாசல்களிலும் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த மக்களுக்காக விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனையில் சுனாமி அனர்த்தத்தால் : இறந்தவர்களை நினைவுகூர்ந்து பிராத்தனை சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த அனர்த்தம் காரணமாக உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று (26) கல்முனைப் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் மெளலவி ஷபானிஸ் தலைமையில் உயிரிழந்தவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.சாய்ந்தமருது ஜும் ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் சுஹதா, பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாசல் மற்றும் மாளிகைக்காடு பள்ளிவாசல்களிலும் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த மக்களுக்காக விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.