• Mar 31 2025

தேசபந்துவுக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது!

Chithra / Mar 29th 2025, 8:58 am
image


பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. 

கடந்த பெப்ரவரி 17 முதல் மார்ச் மாதம் 19 வரையான காலப்பகுதியில் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவாக இருப்பதற்காக குறித்த இருவரும் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன்,

20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்துவுக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. கடந்த பெப்ரவரி 17 முதல் மார்ச் மாதம் 19 வரையான காலப்பகுதியில் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவாக இருப்பதற்காக குறித்த இருவரும் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன்,20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement