• Sep 17 2024

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இருவர் கைது!!

Sharmi / Aug 14th 2024, 9:14 am
image

Advertisement

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் சிவலிங்கம் தலைமையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் கிளாலி பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சட்டவிரோத மணலுடன் சென்று கொண்டிருந்த  டிப்பர் வாகனங்களே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்றையதினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இருவர் கைது யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் சிவலிங்கம் தலைமையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இன்று அதிகாலை 4.30 மணியளவில் கிளாலி பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சட்டவிரோத மணலுடன் சென்று கொண்டிருந்த  டிப்பர் வாகனங்களே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்றையதினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement