• Nov 28 2024

மதுப்பிரியர்களுக்கு காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்த இருவர் கைது...! வெளியான காரணம்...!

Sharmi / Feb 13th 2024, 9:36 am
image

சட்டவிரோதமாக காட்டு விலங்குகளை வேட்டையாடி ஆராச்சிக்கட்டுவ வில்பொத்த பகுதியின் விடுதி ஒன்றில் மது அருந்துவதற்கு வருகை தருபவர்களிடம் உணவிற்காக விற்பனை செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடி ஆராசிக்கட்டுவ வில்பொத்த பகுதியில் விடுதி ஒன்றில் உணவிற்காக விற்பனை செய்து வருவதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (12)  மாலை,  குறித்த விடுதியில், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு குளிரூட்டி பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த காட்டுப்பன்றி இறைச்சி, மான் இறைச்சி மற்றும் எறும்புத்திண்ணி இறைச்சி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சுமர் 103 Kg காட்டுப்பன்றி இறைச்சி, 17 kg மான் இறைச்சி மற்றும் 7kg எறும்புத் திண்ணி இறைச்சி கைப்பற்றப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தபோது, குறித்த விடுதிக்கு மது அருந்துவதற்கு வருகை தருபவர்களுக்கு ஒரு பீங்கான் சுமார் 2500 ரூபாவிற்கு விற்பனை செய்து வந்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வில்பொத்த மற்றும் தப்போவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.



மதுப்பிரியர்களுக்கு காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்த இருவர் கைது. வெளியான காரணம். சட்டவிரோதமாக காட்டு விலங்குகளை வேட்டையாடி ஆராச்சிக்கட்டுவ வில்பொத்த பகுதியின் விடுதி ஒன்றில் மது அருந்துவதற்கு வருகை தருபவர்களிடம் உணவிற்காக விற்பனை செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடி ஆராசிக்கட்டுவ வில்பொத்த பகுதியில் விடுதி ஒன்றில் உணவிற்காக விற்பனை செய்து வருவதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (12)  மாலை,  குறித்த விடுதியில், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு குளிரூட்டி பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த காட்டுப்பன்றி இறைச்சி, மான் இறைச்சி மற்றும் எறும்புத்திண்ணி இறைச்சி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது சுமர் 103 Kg காட்டுப்பன்றி இறைச்சி, 17 kg மான் இறைச்சி மற்றும் 7kg எறும்புத் திண்ணி இறைச்சி கைப்பற்றப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தபோது, குறித்த விடுதிக்கு மது அருந்துவதற்கு வருகை தருபவர்களுக்கு ஒரு பீங்கான் சுமார் 2500 ரூபாவிற்கு விற்பனை செய்து வந்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வில்பொத்த மற்றும் தப்போவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement