• Jun 18 2024

ஐஸ் போதை பொருளுடன் இருவர் கைது- மோட்டர் சைக்கிள் ஒன்று மீட்பு! samugammedia

Tamil nila / Oct 16th 2023, 10:50 am
image

Advertisement

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் 5 கிராம் 40 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் மாமாங்கம் மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு வியாபாரிகளை கைது செய்துள்ளதுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான   பூநொச்சிமுனை பகுதி வீதியில் பொலிஸார் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது அங்கு வீதியில் காத்துக் கொண்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த வியாபரியிடம் மாமாங்கத்தில் இருந்து மோட்டர் சைக்கிளில் சென்ற வியாபாரி ஆகிய இருவரும் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை அவதானித்த பொலிஸார் அவர்களை அங்கு சுற்றிவழைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்

இதில் மாமாங்கத்தைச் சேர்ந்த 39 வயதுடைய வியாபரியிடமிருந்து 5 கிராம் 250 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டதுடன் காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயதுடைய வியாபாரியிடம் 150 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளையும் சட்டவிரோத வியாபாரத்திற்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டதுடன் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



ஐஸ் போதை பொருளுடன் இருவர் கைது- மோட்டர் சைக்கிள் ஒன்று மீட்பு samugammedia காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் 5 கிராம் 40 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் மாமாங்கம் மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு வியாபாரிகளை கைது செய்துள்ளதுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான   பூநொச்சிமுனை பகுதி வீதியில் பொலிஸார் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.இதன் போது அங்கு வீதியில் காத்துக் கொண்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த வியாபரியிடம் மாமாங்கத்தில் இருந்து மோட்டர் சைக்கிளில் சென்ற வியாபாரி ஆகிய இருவரும் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை அவதானித்த பொலிஸார் அவர்களை அங்கு சுற்றிவழைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்இதில் மாமாங்கத்தைச் சேர்ந்த 39 வயதுடைய வியாபரியிடமிருந்து 5 கிராம் 250 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டதுடன் காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயதுடைய வியாபாரியிடம் 150 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளையும் சட்டவிரோத வியாபாரத்திற்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டதுடன் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement