வெவ்வேறு இடங்களில் வீடுகளில் இருந்து இரத்தக் காயங்களுடன் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாத்தளை மாவட்டம், மஹவெல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரத்தக் காயங்களுடன் வயோதிபரின் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்படி இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக அந்தந்தப் பிரதேச வைத்தியசாலைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சடலங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்தக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு; கொலையா என்ற போர்வையில் பொலிஸார் தீவிர விசாரணை வெவ்வேறு இடங்களில் வீடுகளில் இருந்து இரத்தக் காயங்களுடன் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதேவேளை, மாத்தளை மாவட்டம், மஹவெல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரத்தக் காயங்களுடன் வயோதிபரின் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேற்படி இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக அந்தந்தப் பிரதேச வைத்தியசாலைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இந்த இரண்டு சடலங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.