• May 17 2024

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள்: அமைச்சர் விதுர சபையில் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Aug 22nd 2023, 1:58 pm
image

Advertisement

நாட்டின் புராதன சின்னங்களை எதிர்க்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு, குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் கூறப்போகும் கருத்துக்கள், அந்த வழக்குகளுக்கு சாதகமாவோ பாதகமாகவோ கூட மாறலாம்.

எனவே, வழக்கு விசாரணைகள் இடம்பெறும் ஒரு விடயம் தொடர்பாக என்னால் நாடாளுமன்றில் கருத்து கூற முடியாது.

இந்நாட்டை பொறுத்தவரை புராதனச் சின்னங்கள், நாடளாவிய ரீதியாக பல இடங்களில் காணப்படுகின்றன.

பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத்திற்கு இவை உரியதா என்பதல்ல பிரச்சினை.

இந்தப் புராதனச் சின்னங்களின் பெருமையை நாட்டுக்கு மட்டுமன்றி, முழு உலகிற்கும் காண்பிக்க வேண்டும்.

எதிர்க்கால சந்ததியினருக்கு இதனை நாம் இவற்றை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும்.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளத் தயாராக உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள்: அமைச்சர் விதுர சபையில் வெளியிட்ட தகவல் samugammedia நாட்டின் புராதன சின்னங்களை எதிர்க்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“முல்லைத்தீவு, குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.இந்த விவகாரம் தொடர்பாக விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் கூறப்போகும் கருத்துக்கள், அந்த வழக்குகளுக்கு சாதகமாவோ பாதகமாகவோ கூட மாறலாம்.எனவே, வழக்கு விசாரணைகள் இடம்பெறும் ஒரு விடயம் தொடர்பாக என்னால் நாடாளுமன்றில் கருத்து கூற முடியாது.இந்நாட்டை பொறுத்தவரை புராதனச் சின்னங்கள், நாடளாவிய ரீதியாக பல இடங்களில் காணப்படுகின்றன.பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத்திற்கு இவை உரியதா என்பதல்ல பிரச்சினை.இந்தப் புராதனச் சின்னங்களின் பெருமையை நாட்டுக்கு மட்டுமன்றி, முழு உலகிற்கும் காண்பிக்க வேண்டும்.எதிர்க்கால சந்ததியினருக்கு இதனை நாம் இவற்றை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும்.இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளத் தயாராக உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement