• May 17 2024

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த இருவர் உயிரிழப்பு! SamugamMedia

Tamil nila / Mar 11th 2023, 10:59 pm
image

Advertisement

சிவனொளிபாத மலைக்கு  தரிசனம் செய்ய நேற்று 10 திகதி மக்கோன பகுதியில் இருந்த வந்த 67 வயதுடைய என்.ஜ.டி.சஞ்சான் என்பவர் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் வேளையில் கடும் சுகவீனம் காரணமாக  நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொலிஸ்சாரின் உதவியுடன் மஸ்கெலியா பிரதேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது சடலம் இன்று டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது.


மேலும் இன்று 11.03.2023.அதிகாலை வேலையில் மல்வத்துகம பகுதியில் இருந்து வந்த ஆர்.எம்.சிரிவர்தன வயது 58 என்பவர் இன்று அதிகாலை வேளையில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் வேளையில். கடும் சுகவீனம் காரணமாக மலையில் இருந்து அவரது உறவினர்கள் மூலம் நல்லதண்ணி நகருக்கு தூக்கி வரப்பட்ட நிலையில் 1990 அம்பூலன்ஸ் மூலம் மஸ்கெலியா பிராதேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது சடலம் மஸ்கெலியா பிராதேசிய வைத்திய சாலையில் உள்ள சவசாலையில் வைக்க பட்டுள்ளது.


நாளை 12.ம் திகதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.


சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த இருவர் உயிரிழப்பு SamugamMedia சிவனொளிபாத மலைக்கு  தரிசனம் செய்ய நேற்று 10 திகதி மக்கோன பகுதியில் இருந்த வந்த 67 வயதுடைய என்.ஜ.டி.சஞ்சான் என்பவர் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் வேளையில் கடும் சுகவீனம் காரணமாக  நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொலிஸ்சாரின் உதவியுடன் மஸ்கெலியா பிரதேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது சடலம் இன்று டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது.மேலும் இன்று 11.03.2023.அதிகாலை வேலையில் மல்வத்துகம பகுதியில் இருந்து வந்த ஆர்.எம்.சிரிவர்தன வயது 58 என்பவர் இன்று அதிகாலை வேளையில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் வேளையில். கடும் சுகவீனம் காரணமாக மலையில் இருந்து அவரது உறவினர்கள் மூலம் நல்லதண்ணி நகருக்கு தூக்கி வரப்பட்ட நிலையில் 1990 அம்பூலன்ஸ் மூலம் மஸ்கெலியா பிராதேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது சடலம் மஸ்கெலியா பிராதேசிய வைத்திய சாலையில் உள்ள சவசாலையில் வைக்க பட்டுள்ளது.நாளை 12.ம் திகதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement