• May 03 2024

இலங்கையில் குழந்தை ஒன்றுக்கு சண்டையிடும் இரு குடும்பம்! samugammedia

Tamil nila / Apr 27th 2023, 8:07 pm
image

Advertisement

தங்கல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய தாய் ஒருவர் பிறந்து ஒரு நாளே ஆன தனது குழந்தையை ஊர்பொக்க பகுதியில் உள்ள தம்பதியருக்கு தத்தெடுப்பதற்காக விற்றுள்ளார்.

அதன் பின்னர்  தனது குழந்தையைத் தருமாறு தாயார்  கோரிக்கை விடுத்த நிலையில் குழந்தையை வாங்கிய தம்பதியினர் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தாய் காவல்துறையில் சென்று புது ஜோடி மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து , தம்பதியினரை பொலிசார் கைது செய்ததுடன், மேலதிக விசாரணையையும் மேற்கொண்டனர்.

கர்ப்பமாகி ஒரு மாதத்திற்குப் பிறகு மனைவியை, குழந்தையின் தந்தை விட்டுச் சென்றமை தெரியவந்துள்ளது.

குழந்தையை வாங்கிய தம்பதியினர் கிளினிக்குகள் மற்றும் இதர பரிசோதனைகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்று பிரசவத்திற்காக மாத்தறை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித் த்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சிசுவை விற்பனை செய்ததாக கூறப்படும் தாய் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்பொக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


இலங்கையில் குழந்தை ஒன்றுக்கு சண்டையிடும் இரு குடும்பம் samugammedia தங்கல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய தாய் ஒருவர் பிறந்து ஒரு நாளே ஆன தனது குழந்தையை ஊர்பொக்க பகுதியில் உள்ள தம்பதியருக்கு தத்தெடுப்பதற்காக விற்றுள்ளார்.அதன் பின்னர்  தனது குழந்தையைத் தருமாறு தாயார்  கோரிக்கை விடுத்த நிலையில் குழந்தையை வாங்கிய தம்பதியினர் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தாய் காவல்துறையில் சென்று புது ஜோடி மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து , தம்பதியினரை பொலிசார் கைது செய்ததுடன், மேலதிக விசாரணையையும் மேற்கொண்டனர்.கர்ப்பமாகி ஒரு மாதத்திற்குப் பிறகு மனைவியை, குழந்தையின் தந்தை விட்டுச் சென்றமை தெரியவந்துள்ளது.குழந்தையை வாங்கிய தம்பதியினர் கிளினிக்குகள் மற்றும் இதர பரிசோதனைகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்று பிரசவத்திற்காக மாத்தறை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித் த்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சிசுவை விற்பனை செய்ததாக கூறப்படும் தாய் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்பொக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement