கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதிக்கு பொறுப்பான விசேட வைத்தியரை தாக்கியதாக கூறப்படும் சுகாதார பணியாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த 16 ஆம் திகதி முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது,
அந்த வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியின் கனிஸ்ட சுகாதார ஊழியர்களுக்கும் வைத்தியருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த இரண்டு பேரினால் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காலி மற்றும் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த
52 வயதுடைய சுகாதார உதவியாளர் ஒருவரும், 45 மற்றும் 43 வயதுடைய உதவியாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அப்போது வைத்தியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,
சம்பவம் தொடர்பில் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட விசேட வைத்திய நிபுணர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நாளை (22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசேட வைத்தியரை தாக்கிய சுகாதார பணியாளர்கள் இருவர் கைது. கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதிக்கு பொறுப்பான விசேட வைத்தியரை தாக்கியதாக கூறப்படும் சுகாதார பணியாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த 16 ஆம் திகதி முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது, அந்த வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியின் கனிஸ்ட சுகாதார ஊழியர்களுக்கும் வைத்தியருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, குறித்த இரண்டு பேரினால் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.இந்தநிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காலி மற்றும் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சுகாதார உதவியாளர் ஒருவரும், 45 மற்றும் 43 வயதுடைய உதவியாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை, அப்போது வைத்தியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட விசேட வைத்திய நிபுணர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நாளை (22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.