• Nov 26 2024

இலங்கையின் தெற்காக நகரும் மேலும் இரண்டு காற்றுச் சுழற்சிகள் - மக்களுக்கு அவசர எச்சரிக்கை..!

Chithra / Jan 10th 2024, 7:47 am
image

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக நிலைகொண்டுள்ளதால், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் அசாதாரண காலநிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த காற்று சுழற்சி காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை 

மாவட்டங்களில் இன்றையதினம் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை நாளையதினம் வரை தொடரும் வாய்ப்புள்ளது. 

இதேவேளை எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதியளவில் மேலும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கையை நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணத்தினாலும் இக்காலப் பகுதிகளில் ஓரளவு மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பதுளை - பண்டாரவளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

ஹாலிஎல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இந்தநிலையில் மண்மேட்டை அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பாதை சீரமைக்கப்படும் வரையில் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தின் மனம்பிட்டிய - கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


இலங்கையின் தெற்காக நகரும் மேலும் இரண்டு காற்றுச் சுழற்சிகள் - மக்களுக்கு அவசர எச்சரிக்கை. வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக நிலைகொண்டுள்ளதால், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் அசாதாரண காலநிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.இந்த காற்று சுழற்சி காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்றையதினம் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.இதற்கமைய இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை நாளையதினம் வரை தொடரும் வாய்ப்புள்ளது. இதேவேளை எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதியளவில் மேலும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கையை நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதன் காரணத்தினாலும் இக்காலப் பகுதிகளில் ஓரளவு மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதனிடையே, கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பதுளை - பண்டாரவளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.ஹாலிஎல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.இந்தநிலையில் மண்மேட்டை அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த பாதை சீரமைக்கப்படும் வரையில் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.மேலும் பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தின் மனம்பிட்டிய - கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement