• Nov 28 2024

ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு புதிய எம்.பிக்கள்..! பண்டாரிகொடவின் பெயர் பரிந்துரை

Chithra / Aug 9th 2024, 12:47 pm
image

 

உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமைய வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்ய எதிர்பார்த்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

வெற்றிடமாகியுள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் கட்சியின் உயர்பீடம் கூடி கலந்துரையாடல்களை நடாத்தி தீர்மானிக்கும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்கு அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வெற்றிடமாகியுள்ளன.

மனுஷ நாணயக்கார தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானதுடன், ஹரின் பெர்ணான்டோ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு புதிய எம்.பிக்கள். பண்டாரிகொடவின் பெயர் பரிந்துரை  உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமைய வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்ய எதிர்பார்த்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.வெற்றிடமாகியுள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் கட்சியின் உயர்பீடம் கூடி கலந்துரையாடல்களை நடாத்தி தீர்மானிக்கும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.அரசாங்கத்துக்கு அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வெற்றிடமாகியுள்ளன.மனுஷ நாணயக்கார தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானதுடன், ஹரின் பெர்ணான்டோ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement