• May 21 2024

Chithra / Jan 22nd 2023, 12:08 pm
image

Advertisement

தங்காலை மாநகர சபையின் தலைவர் டபிள்யூ.பி. ஆரியதாச மற்றும் மாநகர சபை உறுப்பினர் அரலிய எரந்திம ஆகியோர் நேற்று (21) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியிடம் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டதுடன், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தங்காலை மாநகர சபைக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் வழங்கினர்.


இதனைத் தெரிவிக்கும் வகையில் அவரது அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றதுடன் இதில் மாநகர சபையின் தலைவர், மாநகர சபை உறுப்பினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தங்காலை மாநகர சபையின் தலைவரும், அரலிய எரந்திமவும் இணைந்து மக்கள் இயக்கத்தில் இணைந்தது தனக்கு கிடைத்த வெற்றி என ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி தெரிவித்தார். தங்காலை நகரம் ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல அது எமக்கு சொந்தமானது என திலீப் வேதஆரச்சி தெரிவித்துள்ளார்.

இரண்டு ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன பெரமுன அணியினரும் தங்காலை நகர மக்களுக்கு சேவையாற்ற இடமளிக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மாநகர சபை உறுப்பினர் மற்றும் தலைவர் தெரிவித்தார். அதனால்தான், அந்த வேலையைச் செய்யக்கூடிய ஒரு குழுவில் சேர முடிவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மொட்டுகள் இரண்டு சஜித்துடன் இணைந்தன தங்காலை மாநகர சபையின் தலைவர் டபிள்யூ.பி. ஆரியதாச மற்றும் மாநகர சபை உறுப்பினர் அரலிய எரந்திம ஆகியோர் நேற்று (21) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியிடம் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டதுடன், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தங்காலை மாநகர சபைக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் வழங்கினர்.இதனைத் தெரிவிக்கும் வகையில் அவரது அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றதுடன் இதில் மாநகர சபையின் தலைவர், மாநகர சபை உறுப்பினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.தங்காலை மாநகர சபையின் தலைவரும், அரலிய எரந்திமவும் இணைந்து மக்கள் இயக்கத்தில் இணைந்தது தனக்கு கிடைத்த வெற்றி என ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி தெரிவித்தார். தங்காலை நகரம் ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல அது எமக்கு சொந்தமானது என திலீப் வேதஆரச்சி தெரிவித்துள்ளார்.இரண்டு ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன பெரமுன அணியினரும் தங்காலை நகர மக்களுக்கு சேவையாற்ற இடமளிக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மாநகர சபை உறுப்பினர் மற்றும் தலைவர் தெரிவித்தார். அதனால்தான், அந்த வேலையைச் செய்யக்கூடிய ஒரு குழுவில் சேர முடிவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement