• May 18 2024

யாழ். பல்கலைக்குப் பேரவை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்!

Chithra / Jan 22nd 2023, 12:32 pm
image

Advertisement

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.

உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன், சட்டத்தரணி பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் யாழ். மாவட்டப் பணிப்பாளர் தில்லையம்பலவாணர் விமலன், சப்ரகமுவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் மஹிந்த எஸ் ரூபசிங்க, வாழ்நாள் பேராசிரியர் குமுது விஜேவர்த்தன, ஓய்வுபெற்ற வணக்கத்துக்குரிய பேராசிரியர் ஞா. பிலேந்திரன், சட்டத்தரணி டி. ரெங்கன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதவான் திருமதி ஶ்ரீநிதி நந்தசேகரன் மற்றும் ஏந்திரி ரி. சாந்தாதேவி ஆகியோரே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக விதிமுறைகளுக்கமைய 15 வெளிவாரி உறுப்பினர்களைக் கொண்ட யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு 9 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


யாழ். பல்கலைக்குப் பேரவை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம் யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன், சட்டத்தரணி பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் யாழ். மாவட்டப் பணிப்பாளர் தில்லையம்பலவாணர் விமலன், சப்ரகமுவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் மஹிந்த எஸ் ரூபசிங்க, வாழ்நாள் பேராசிரியர் குமுது விஜேவர்த்தன, ஓய்வுபெற்ற வணக்கத்துக்குரிய பேராசிரியர் ஞா. பிலேந்திரன், சட்டத்தரணி டி. ரெங்கன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதவான் திருமதி ஶ்ரீநிதி நந்தசேகரன் மற்றும் ஏந்திரி ரி. சாந்தாதேவி ஆகியோரே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பல்கலைக்கழக விதிமுறைகளுக்கமைய 15 வெளிவாரி உறுப்பினர்களைக் கொண்ட யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு 9 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement