ஹெராயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் பிரதேச குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த 13 ம் திகதி 5870 மில்லி கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை ஏழு நட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிலாபம் வட்டக்கள்ளிய பகுதியைச் சேர்ந்த ஹெராயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சந்தேக நபர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் நேற்று (16) நண்பகல் தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பொலிஸார் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சந்தேக நபர் தப்பிக்க உதவினார்கள் என்ற குற்றச் சாட்டின் கீழ் அன்றைய தினம் பகல் நேர கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் தப்பியோட்டம்- பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது ஹெராயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.சிலாபம் பிரதேச குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த 13 ம் திகதி 5870 மில்லி கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை ஏழு நட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சிலாபம் வட்டக்கள்ளிய பகுதியைச் சேர்ந்த ஹெராயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில் சந்தேக நபர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் நேற்று (16) நண்பகல் தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு பொலிஸார் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சந்தேக நபர் தப்பிக்க உதவினார்கள் என்ற குற்றச் சாட்டின் கீழ் அன்றைய தினம் பகல் நேர கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.