• Dec 04 2024

கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு

Chithra / Dec 3rd 2024, 10:48 am
image


உணவு வழங்கவில்லை எனக் கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பருத்தித்துறை - கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் எனக் கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டனர்.  

இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இருவரையும் நேற்று திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு உணவு வழங்கவில்லை எனக் கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பருத்தித்துறை - கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் எனக் கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டனர்.  இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இருவரையும் நேற்று திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement