• Mar 11 2025

இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் மாயம்..! தேடும் பணி தீவிரம்

Chithra / Aug 23rd 2024, 10:12 am
image

 பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்று பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து, ஆட்களை ஏற்றிச் சென்ற படகும், பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவர் விபத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அளுத்கம மற்றும் பெந்தர பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் மாயம். தேடும் பணி தீவிரம்  பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.நேற்று பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து, ஆட்களை ஏற்றிச் சென்ற படகும், பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவர் விபத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர்களின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் அளுத்கம மற்றும் பெந்தர பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement