• May 21 2024

எம்.பி. பதவியை இழக்கப்போகும் இரண்டு பெண்கள்?

Chithra / Dec 7th 2022, 9:35 am
image

Advertisement

அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பேரிடியாக மாறியுள்ளது. இந்நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தால் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எம்.பி. பதவியை இழக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

அவர்களில் ஒருவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 'மொட்டு'க் கட்சியில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவர் சுவிஸ்லாந்தின் பிரஜாவுரிமையை வைத்துள்ளார் என்று சொல்லப்படுகின்றது.

அடுத்தவர் டயனா கமகே. அவரும் இராஜாங்க அமைச்சர். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் எம்.பி. அவர் அப்போது 'மொட்டு'ப் பக்கம் தாவி இருந்தார். அவர் பிரிட்டன்  பிரஜாவுரிமையை வைத்துள்ளார் என்று சொல்லப்படுகின்றது.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இரட்டைப் பிரஜாவுரிமை உடையவர்கள் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் எம்.பி. பதவியை இழப்பர்.

எம்.பி. பதவியை இழக்கப்போகும் இரண்டு பெண்கள் அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பேரிடியாக மாறியுள்ளது. இந்நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தால் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எம்.பி. பதவியை இழக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.அவர்களில் ஒருவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 'மொட்டு'க் கட்சியில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவர் சுவிஸ்லாந்தின் பிரஜாவுரிமையை வைத்துள்ளார் என்று சொல்லப்படுகின்றது.அடுத்தவர் டயனா கமகே. அவரும் இராஜாங்க அமைச்சர். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் எம்.பி. அவர் அப்போது 'மொட்டு'ப் பக்கம் தாவி இருந்தார். அவர் பிரிட்டன்  பிரஜாவுரிமையை வைத்துள்ளார் என்று சொல்லப்படுகின்றது.இது தொடர்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இரட்டைப் பிரஜாவுரிமை உடையவர்கள் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் எம்.பி. பதவியை இழப்பர்.

Advertisement

Advertisement

Advertisement