• Sep 20 2024

தியாகி பொன். சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு..!samugammedia

Sharmi / Jun 5th 2023, 10:13 am
image

Advertisement

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தியாகியான பொன். சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இன்று(06) காலை இடம்பெற்றது.

யாழ் உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலையின் முன்பாக நினைவேந்தல்  நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நினைவேந்தலில் முதலில் ஈகைச் சுடரேற்றப்பட்டு பொன். சிவகுமாரின் உருவச் சிலைக்கு  மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவேந்தல் உரைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்பா. கஜதீபன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



இதேவேளை சிவகுமாரின் நினைவிடத்தில் முன்னாள் வடக்கு மாகான சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மற்றுமொரு அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றதுடன் குறித்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகான சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் பொதுமக்களும் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.








தியாகி பொன். சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு.samugammedia தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தியாகியான பொன். சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இன்று(06) காலை இடம்பெற்றது.யாழ் உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலையின் முன்பாக நினைவேந்தல்  நிகழ்வு இடம்பெற்றது. இவ் நினைவேந்தலில் முதலில் ஈகைச் சுடரேற்றப்பட்டு பொன். சிவகுமாரின் உருவச் சிலைக்கு  மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவேந்தல் உரைகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்பா. கஜதீபன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.இதேவேளை சிவகுமாரின் நினைவிடத்தில் முன்னாள் வடக்கு மாகான சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மற்றுமொரு அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றதுடன் குறித்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகான சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் பொதுமக்களும் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement