இன்று இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் இப்போட்டி ஆரம்பமாகியிருந்தது.
இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. எவ்வாறு இருப்பினும் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் 20 ஓவர்களின் முடிவில் 82 ஓட்டங்களுக்குள் தென்னாப்பிரிக்கா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் 23 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக் கொடுத்தார். இதேவேளை இந்திய அணி தரப்பில், வீராங்கனை த்ரிஷா கொங்காடி( Trisha Gongadi) 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார். அதே நேரம் இந்தியாவின் பருணிகா சிசோடியா, தென்னாப்பிரிக்காவின் சிமோனை கிளின் போல்ட் செய்தார்.
மேலும், பருணிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து83 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய த்ரிஷா கொங்காடி (Gongadi Trisha) 44 ஓட்டங்களையும் Sanika Chalke 26 ஓட்டஙகளையும் பெற்றிருந்துடன் இருவரும் ஆட்டமிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
U19 Women’s T20 World Cup: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி இன்று இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் இப்போட்டி ஆரம்பமாகியிருந்தது.இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. எவ்வாறு இருப்பினும் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் 20 ஓவர்களின் முடிவில் 82 ஓட்டங்களுக்குள் தென்னாப்பிரிக்கா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்தது.அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் 23 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக் கொடுத்தார். இதேவேளை இந்திய அணி தரப்பில், வீராங்கனை த்ரிஷா கொங்காடி( Trisha Gongadi) 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார். அதே நேரம் இந்தியாவின் பருணிகா சிசோடியா, தென்னாப்பிரிக்காவின் சிமோனை கிளின் போல்ட் செய்தார்.மேலும், பருணிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து83 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.இந்திய அணி சார்பில் சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய த்ரிஷா கொங்காடி (Gongadi Trisha) 44 ஓட்டங்களையும் Sanika Chalke 26 ஓட்டஙகளையும் பெற்றிருந்துடன் இருவரும் ஆட்டமிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.