• Mar 04 2025

பிரித்தானியா 2.8 பில்லியன் டொலர் கடனை உக்ரைனுக்கு வழங்க தீர்மானம் – ஒப்பந்தம் கைச்சாத்து

Tharmini / Mar 2nd 2025, 10:53 am
image

உக்ரைன் ஜனாதிபதி, ட்ரம்பை சந்தித்த பின்னர் டவுனிங்கில் சர் கீர் ஸ்டார்மரை சந்தித்தார்.

இதன்போதே பிரித்தானிய பிரதமர் தமது முழு ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தார்.

பிரித்தானியாவின் முழு ஆதரவும் உக்ரைனுக்கு உள்ளதாக பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு இவ்வாறான நட்புகள் காணப்படுவது மிகவும் மகிழ்ச்சியென செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய இராணுவப் பொருட்களுக்கான 2.26 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் கடனிலும் செலென்ஸ்கி மற்றும் ஸ்டார்மர் கையெழுத்திட்டனர்.

இந்த கடன் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களிலிருந்து கிடைக்கும் லாபத்தைப் பயன்படுத்தி திருப்பிச் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மற்றும் பரந்த ஐரோப்பிய பாதுகாப்பு குறித்து லண்டனில் ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாட்டை சர் கீர் ஸ்டார்மர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறார்.

பிரித்தானியா 2.8 பில்லியன் டொலர் கடனை உக்ரைனுக்கு வழங்க தீர்மானம் – ஒப்பந்தம் கைச்சாத்து உக்ரைன் ஜனாதிபதி, ட்ரம்பை சந்தித்த பின்னர் டவுனிங்கில் சர் கீர் ஸ்டார்மரை சந்தித்தார். இதன்போதே பிரித்தானிய பிரதமர் தமது முழு ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தார்.பிரித்தானியாவின் முழு ஆதரவும் உக்ரைனுக்கு உள்ளதாக பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.உக்ரைனுக்கு இவ்வாறான நட்புகள் காணப்படுவது மிகவும் மகிழ்ச்சியென செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரைனிய இராணுவப் பொருட்களுக்கான 2.26 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் கடனிலும் செலென்ஸ்கி மற்றும் ஸ்டார்மர் கையெழுத்திட்டனர்.இந்த கடன் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களிலிருந்து கிடைக்கும் லாபத்தைப் பயன்படுத்தி திருப்பிச் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மற்றும் பரந்த ஐரோப்பிய பாதுகாப்பு குறித்து லண்டனில் ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாட்டை சர் கீர் ஸ்டார்மர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறார்.

Advertisement

Advertisement

Advertisement