• May 20 2024

ரஷ்யாவில் உக்ரைன் படையினர் ஷெல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!

Tamil nila / Jan 7th 2023, 10:57 pm
image

Advertisement

ரஷ்யா 36 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உக்ரைன் செல் தாக்குதல்களை நடத்தியாதாக கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது.


இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் படைகள் நடத்திய நான்கு தாக்குதல்களை ரஷ்யா முறியடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


கார்கிவ், கெர்சன், சுமி, மைகோலைவ் மற்றும் சபோர்ஜியா ஆகிய பகுதிகளுடன் சேர்ந்து கிழக்கு டொனஸ்க் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கீவ் போர்நிறுத்தத்தை உறுதியாக நிராகரித்துள்ளது. ரஷ்யா அறிவித்துள்ள போர் நிறுத்தமானது துருப்புக்களை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி என குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் உக்ரைன் படையினர் ஷெல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு ரஷ்யா 36 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உக்ரைன் செல் தாக்குதல்களை நடத்தியாதாக கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது.இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் படைகள் நடத்திய நான்கு தாக்குதல்களை ரஷ்யா முறியடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.கார்கிவ், கெர்சன், சுமி, மைகோலைவ் மற்றும் சபோர்ஜியா ஆகிய பகுதிகளுடன் சேர்ந்து கிழக்கு டொனஸ்க் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கீவ் போர்நிறுத்தத்தை உறுதியாக நிராகரித்துள்ளது. ரஷ்யா அறிவித்துள்ள போர் நிறுத்தமானது துருப்புக்களை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி என குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement