புத்தளம் - ரத்மல்யாய ,முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜும்மா மஸ்ஜிதில் மதரஸா மாணவர்கள், உலமாக்கள் மற்றும் ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்கள் நேற்றையதினம் (31) கௌரவிக்கப்பட்டனர்.
புனித நோன்புப் பெருநாள் தொழுகையை அடுத்து முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக தலைவர் அப்துல் வதூத் மௌலவி தலைமையில் இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
புனித ரமழான் மாதம் முழுவதும் தராவீஹ் மற்றும் நோன்பின் இறுதிப் பத்தில் கியாமுல் லைல் ஆகிய தொழுகையினை நடத்திய உலமாக்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.சப்ரின் (மிஸ்பாஹி), அஷ்ஷெய்க் அல் - ஹாபில் ஏ.டபிள்யூ. பஸ்லுல் ஹக் முப்தி (தீனி), அஷ்ஷெய்க் எம்.ரி.அஸ்லம் (ஷாபிஈ), அஷ்ஷெய்க் அல் - ஹாபில் எம்.ஆர்.எம்.அம்மார் (நூரி) ஆகிய உலமாக்களும் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதில் கடமைபுரியும் முஅத்தின் வை. அல்ஹாக் ஆகியோர் இதன்போது விஷேட கொடுப்பனவுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு, மார்க்க கல்வியை நிறைவு செய்த அஷ்ஷெய்க் யு.எம்.றுஸ்தி (முஹாஜிரி) இதன்போது அன்பளிப்பு மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் , குறித்த மஸ்ஜிதில் புனித ரமழான் மாதம் முழுதும் தராவீஹ் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற "ஹிஸ்புல் குர்ஆன்" ஓதிய மாணவர்களை கௌரவிக்கும் முகமாக புத்தளம் ஜமியத்துல் உலமா சபையினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் அந்தந்த மாணவர்களின் பெற்றோர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, முல்லை ஸ்கீம் கிராமத்திலிருந்து பல மாணவர்கள் மதரஸாவில் மார்க்கக் கல்வியை கற்றுக்கொண்டிருக்கும் நிலையில் எதிர்காலத்தில் ஹாபில்களாக, உலமாக்களாக வெளியேறவுள்ள அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முல்லை ஸ்கீம் கிராமத்தை சேர்ந்த நலன் விரும்பிகள் சிலர், உலமாக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை அன்பளிப்பாக வழங்குவதற்கு நிதி உதவியை வழங்கியுள்ளனர்.
மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், புத்தளம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான தேசகீர்த்தி ரிபாஸ் நஸீரின் முயற்சியால் பரிசில்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம்- ரத்மல்யாய முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதில் உலமாக்கள் கௌரவிப்பு. புத்தளம் - ரத்மல்யாய ,முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜும்மா மஸ்ஜிதில் மதரஸா மாணவர்கள், உலமாக்கள் மற்றும் ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்கள் நேற்றையதினம் (31) கௌரவிக்கப்பட்டனர்.புனித நோன்புப் பெருநாள் தொழுகையை அடுத்து முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக தலைவர் அப்துல் வதூத் மௌலவி தலைமையில் இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.புனித ரமழான் மாதம் முழுவதும் தராவீஹ் மற்றும் நோன்பின் இறுதிப் பத்தில் கியாமுல் லைல் ஆகிய தொழுகையினை நடத்திய உலமாக்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.சப்ரின் (மிஸ்பாஹி), அஷ்ஷெய்க் அல் - ஹாபில் ஏ.டபிள்யூ. பஸ்லுல் ஹக் முப்தி (தீனி), அஷ்ஷெய்க் எம்.ரி.அஸ்லம் (ஷாபிஈ), அஷ்ஷெய்க் அல் - ஹாபில் எம்.ஆர்.எம்.அம்மார் (நூரி) ஆகிய உலமாக்களும் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதில் கடமைபுரியும் முஅத்தின் வை. அல்ஹாக் ஆகியோர் இதன்போது விஷேட கொடுப்பனவுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்தோடு, மார்க்க கல்வியை நிறைவு செய்த அஷ்ஷெய்க் யு.எம்.றுஸ்தி (முஹாஜிரி) இதன்போது அன்பளிப்பு மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.மேலும் , குறித்த மஸ்ஜிதில் புனித ரமழான் மாதம் முழுதும் தராவீஹ் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற "ஹிஸ்புல் குர்ஆன்" ஓதிய மாணவர்களை கௌரவிக்கும் முகமாக புத்தளம் ஜமியத்துல் உலமா சபையினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் அந்தந்த மாணவர்களின் பெற்றோர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதேவேளை, முல்லை ஸ்கீம் கிராமத்திலிருந்து பல மாணவர்கள் மதரஸாவில் மார்க்கக் கல்வியை கற்றுக்கொண்டிருக்கும் நிலையில் எதிர்காலத்தில் ஹாபில்களாக, உலமாக்களாக வெளியேறவுள்ள அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.முல்லை ஸ்கீம் கிராமத்தை சேர்ந்த நலன் விரும்பிகள் சிலர், உலமாக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை அன்பளிப்பாக வழங்குவதற்கு நிதி உதவியை வழங்கியுள்ளனர்.மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், புத்தளம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான தேசகீர்த்தி ரிபாஸ் நஸீரின் முயற்சியால் பரிசில்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.