• Apr 02 2025

உரிமை கோரப்படாத பயணப்பொதிகள் விற்பனை? கட்டுநாயக்க விமான நிலையத்தின் எச்சரிக்கை

Chithra / Oct 20th 2024, 4:12 pm
image

 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படும் உத்தியோகபூர்வமற்ற பேஸ்புக் பக்கம் குறித்து விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்தப் பக்கம், உரிமை கோரப்படாத பயணப் பொதிகள் விற்பனைக்கு உள்ளதாகவும் மேலும் பல தவறான தகவல்களையும் பரப்பி வருகிறது.

குறித்த பேஸ்புக் பக்கத்தில் உள்ள ஒரு இடுகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் நிரப்பப்பட்ட ஒரு பயணப்பொதி வெறும் 639 ரூபாவுக்கு விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணப் பொதிகள் விற்பனை செய்யப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், இந்த மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

உரிமை கோரப்படாத பயணப்பொதிகள் விற்பனை கட்டுநாயக்க விமான நிலையத்தின் எச்சரிக்கை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படும் உத்தியோகபூர்வமற்ற பேஸ்புக் பக்கம் குறித்து விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இந்தப் பக்கம், உரிமை கோரப்படாத பயணப் பொதிகள் விற்பனைக்கு உள்ளதாகவும் மேலும் பல தவறான தகவல்களையும் பரப்பி வருகிறது.குறித்த பேஸ்புக் பக்கத்தில் உள்ள ஒரு இடுகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் நிரப்பப்பட்ட ஒரு பயணப்பொதி வெறும் 639 ரூபாவுக்கு விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணப் பொதிகள் விற்பனை செய்யப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், இந்த மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement