• Nov 20 2024

ரவியின் நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாது; இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்கிறார் வஜிர

Chithra / Nov 19th 2024, 10:46 am
image

  

தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயர் அனுப்பட்டமை ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாது. அவரின் இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புக்கு முரணாகும்.  என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அனுப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று காலியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாமலேயே ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. 

சிலிண்டருக்கு உரித்தான அரசியல் கட்சியின் மூலமே அவரின் பெயர் வர்த்தமானியில் வெளியிட அனுப்பப்பட்டுள்ளதாகவே அறியக்கிடைத்திருக்கிறது.

புதிய ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் தலதா அத்துகோரல அல்லது சட்டத்தரணி ராேனால் பெரேராவை நியமிக்கவே கலந்துரையாடி இருந்தோம். 

இதுதொடர்பில் உறுதியான தீரமானம் எடுப்பதற்கு முன்னர் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

எனவே இந்த பிரச்சினை தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடன் இன்று கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்க இருக்கிறோம்.- என்றார்.

ரவியின் நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாது; இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்கிறார் வஜிர   தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயர் அனுப்பட்டமை ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாது. அவரின் இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புக்கு முரணாகும்.  என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அனுப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று காலியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாமலேயே ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. சிலிண்டருக்கு உரித்தான அரசியல் கட்சியின் மூலமே அவரின் பெயர் வர்த்தமானியில் வெளியிட அனுப்பப்பட்டுள்ளதாகவே அறியக்கிடைத்திருக்கிறது.புதிய ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் தலதா அத்துகோரல அல்லது சட்டத்தரணி ராேனால் பெரேராவை நியமிக்கவே கலந்துரையாடி இருந்தோம். இதுதொடர்பில் உறுதியான தீரமானம் எடுப்பதற்கு முன்னர் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த பிரச்சினை தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடன் இன்று கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்க இருக்கிறோம்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement