• Jun 26 2024

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதிய அவசர கடிதம்...!samugammedia

Sharmi / Sep 13th 2023, 3:26 pm
image

Advertisement

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக அதன் நகல் வடிவை சமர்ப்பிக்குமாறு இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அமைச்சரவை அனுமதி வழங்கிய சட்ட மூலத்தின் நகல்வடிவையே  ஆராய்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

2023 மார்ச்மாதம் 17 திகதி வர்த்தமானியில் வெளியான சட்டமூலத்தின் திருத்தப்பட்ட பதிப்பே தற்போதைய சட்டமூலம்  என கருதுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் வெளியான சட்டமூலம் குறித்த தனது அவதானிப்புகளை மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.

தற்போதைய சட்டமூலத்தின் நகல் கிடைத்ததும் அதனை ஆராய்ந்த பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கருத்துக்களை அவதானிப்புகளை முன்வைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதிய அவசர கடிதம்.samugammedia புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக அதன் நகல் வடிவை சமர்ப்பிக்குமாறு இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளது.இந்நிலையில், சமீபத்தில் அமைச்சரவை அனுமதி வழங்கிய சட்ட மூலத்தின் நகல்வடிவையே  ஆராய்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.2023 மார்ச்மாதம் 17 திகதி வர்த்தமானியில் வெளியான சட்டமூலத்தின் திருத்தப்பட்ட பதிப்பே தற்போதைய சட்டமூலம்  என கருதுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மார்ச் மாதம் வெளியான சட்டமூலம் குறித்த தனது அவதானிப்புகளை மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.தற்போதைய சட்டமூலத்தின் நகல் கிடைத்ததும் அதனை ஆராய்ந்த பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கருத்துக்களை அவதானிப்புகளை முன்வைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement