அமெரிக்கா செல்ல தயாராகியுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவரின் அமெரிக்க விஸா மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் இணைந்து எடுத்த செல்ஃபி படம் குறித்து சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கான வீசா விண்ணப்பப் பணியின் போது இந்த செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களுக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடலும் இடம்பெற்றது.
அங்கு சென்ற இருவர் எதிர்பாராத அனுபவத்தை சந்திக்க நேரிட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடரில் அணியுடன் இணைந்து கொள்ளவிருந்த இலங்கை அணி வீரர் ஒருவரினதும், அணி உதவியாளர் ஒருவரினதும் வீசாவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க தூதரகம். அமெரிக்கா செல்ல தயாராகியுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவரின் அமெரிக்க விஸா மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அதாவது இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் இணைந்து எடுத்த செல்ஃபி படம் குறித்து சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கான வீசா விண்ணப்பப் பணியின் போது இந்த செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களுக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடலும் இடம்பெற்றது.அங்கு சென்ற இருவர் எதிர்பாராத அனுபவத்தை சந்திக்க நேரிட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.தொடரில் அணியுடன் இணைந்து கொள்ளவிருந்த இலங்கை அணி வீரர் ஒருவரினதும், அணி உதவியாளர் ஒருவரினதும் வீசாவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.