• May 03 2024

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க வரும் அமெரிக்க நிறுவனம் ! samugammedia

Tamil nila / Sep 24th 2023, 5:04 pm
image

Advertisement

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர்எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் அந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம், 20 வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

இந்த நிறுவனத்திற்கு முதலில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 150 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்படும் எனவும் பின்னர் 50 எரிபொருள் நிலையங்களை சொந்தமாக திறக்க வாய்ப்பு கிடைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் எரிபொருள் விநியோகத்தைத் ஆரம்பித்த சீனாவின் சினோபெக் நிறுவனம் இரண்டு பிரதேசங்களில் தற்போது விநியோகத்தை முன்னெடுத்துள்ளது.

சினோபெக் தற்போது அனைத்து வகையான எரிபொருளையும் தமது போட்டியாளர்களைவிட 3 ரூபா குறைவாக வழங்குகிறது.

இந்தநிலையில், ஆர்.எம்.பார்க்ஸ் நிறுவனத்துக்கும் அதன் எரிபொருளை உள்ளுர் சந்தையில் உள்ள விலையை விடவும் குறைந்த விலையில் வழங்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.



இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க வரும் அமெரிக்க நிறுவனம் samugammedia அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர்எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.எரிபொருட்களை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் அந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம், 20 வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.இந்த நிறுவனத்திற்கு முதலில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 150 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்படும் எனவும் பின்னர் 50 எரிபொருள் நிலையங்களை சொந்தமாக திறக்க வாய்ப்பு கிடைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் எரிபொருள் விநியோகத்தைத் ஆரம்பித்த சீனாவின் சினோபெக் நிறுவனம் இரண்டு பிரதேசங்களில் தற்போது விநியோகத்தை முன்னெடுத்துள்ளது.சினோபெக் தற்போது அனைத்து வகையான எரிபொருளையும் தமது போட்டியாளர்களைவிட 3 ரூபா குறைவாக வழங்குகிறது.இந்தநிலையில், ஆர்.எம்.பார்க்ஸ் நிறுவனத்துக்கும் அதன் எரிபொருளை உள்ளுர் சந்தையில் உள்ள விலையை விடவும் குறைந்த விலையில் வழங்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement