• Sep 19 2024

உலகின் அதிநவீன விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்கும் அமெரிக்கா!

Chithra / Dec 8th 2022, 1:24 pm
image

Advertisement

 

இலங்கையில் விவசாயத் துறையை அதிகரிக்க தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய விவசாய அறிவுக்குப் பதிலாக புதிய விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

உலகின் அதிநவீன விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்த தமது நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு தெரிவித்துள்ளனர்.

புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குறைந்த நிலப்பரப்பில் அதிக அறுவடையைப் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பாராட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உலகின் அதிநவீன விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்கும் அமெரிக்கா  இலங்கையில் விவசாயத் துறையை அதிகரிக்க தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய விவசாய அறிவுக்குப் பதிலாக புதிய விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.விவசாய அமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.உலகின் அதிநவீன விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்த தமது நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு தெரிவித்துள்ளனர்.புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குறைந்த நிலப்பரப்பில் அதிக அறுவடையைப் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பாராட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement