• Nov 22 2024

நீரை சிக்கனமாக பயன்படுங்கள்..! இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்..!

Chithra / Feb 20th 2024, 10:39 am
image

 

நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையால் களனி ஆற்றின் குறுக்கே உப்புத் தடுப்புச்சுவரை அமைக்கும் திட்டத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (WSDB) அறிவித்துள்ளது.

அதன்படி, தடுப்புச்சுவர் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள்  இடம்பெற்று வருவதாக பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தற்போதுள்ள நீர் கொள்ளளவை பயன்படுத்தி நீர் விநியோகம் தொடர்ந்து நடைபெறும். 

நாட்டில் வரட்சியான வானிலை நீடித்து வருவதோடு, நீரின் நுகர்வு அதிகரித்துள்ளது. 

எனவே, பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.


நீரை சிக்கனமாக பயன்படுங்கள். இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்.  நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையால் களனி ஆற்றின் குறுக்கே உப்புத் தடுப்புச்சுவரை அமைக்கும் திட்டத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (WSDB) அறிவித்துள்ளது.அதன்படி, தடுப்புச்சுவர் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள்  இடம்பெற்று வருவதாக பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.அத்தோடு, தற்போதுள்ள நீர் கொள்ளளவை பயன்படுத்தி நீர் விநியோகம் தொடர்ந்து நடைபெறும். நாட்டில் வரட்சியான வானிலை நீடித்து வருவதோடு, நீரின் நுகர்வு அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement