நாட்டில் தற்போது ஆடைத் தொழிற்சாலைகளில் பெரும் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதால் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த அதிகளவிலான தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு சென்றுள்ளமை மற்றும் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை இதற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது.
ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது சுமார் நாற்பதாயிரம் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக தெரியவந்துள்ளது.
ஏற்றுமதிக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றை செய்து முடிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி கைத்தொழில் சபையின் மேலதிக செயலாளர் ருமேஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், ஆடைத் தொழிலுக்கான பயிற்சி பெற்ற தொழிலாளர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்றுமதி வருமானம் கடந்த மாதம் 1165. 4 மில்லியன் அமெரிக்கன் டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த அதிகரிப்பானது 4.18 வீத வளர்ச்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடம்: இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய சிக்கல் நாட்டில் தற்போது ஆடைத் தொழிற்சாலைகளில் பெரும் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதால் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த அதிகளவிலான தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு சென்றுள்ளமை மற்றும் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை இதற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது.ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது சுமார் நாற்பதாயிரம் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக தெரியவந்துள்ளது.ஏற்றுமதிக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றை செய்து முடிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி கைத்தொழில் சபையின் மேலதிக செயலாளர் ருமேஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.மேலும், ஆடைத் தொழிலுக்கான பயிற்சி பெற்ற தொழிலாளர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, நாட்டில் ஏற்றுமதி வருமானம் கடந்த மாதம் 1165. 4 மில்லியன் அமெரிக்கன் டொலராக பதிவாகியுள்ளது.கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த அதிகரிப்பானது 4.18 வீத வளர்ச்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.