• Oct 17 2024

சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா...!

Tamil nila / Oct 16th 2024, 8:47 pm
image

Advertisement

வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று 16/10/2024 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், தலமையில் மிக மிக சிறப்பாக இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பருத்தித்துறை ஓராம் கட்டை சந்தியிலிருந்து விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர் அவர்களை  தொடர்ந்து மாணவர்கள், பிரதேச கலைஞர்களின் இன்னியம்,  சிலம்பம், காவடி, கரகம், தவில், உடுக்கடி என்பன இடம் பெற்றதனை தொடர்ந்து கடல்வளம், பனை வளம், தமிழரின் பாரம்பரியம், தொல்பொருள் சின்னங்கள், விவசாயம் போன்ற ஊர்திகளும் காட்சிக்கு பவனியாக வந்தன. 

அணிவகுப்புக்கள் விழா மண்டபம் வரை சென்றை அடுத்து மங்கல சுடர்கள் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 



மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தருமான சிறி சற்குணராசா, நிகழ்வின் தலைவரும்,  வடமராட்சி வடக்கு பிரதேச செயலருமான  சிவபாதசுந்தரம் சத்தியசீலன்,  சிறப்பு விருந்தினர்களான பிரதி பிரதேச செயலர்  பசுபதி தயானந்தன்,   நிகழ்வின் வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் சு.சுபாஸ்கரன்,  யாழ்மாவட்ட செயலக சிரேஸ்ட கலாசா உத்தியோகத்தர் திருமதி க. விஜயரத்தினம், நிகழ்வின் கௌரவ விருந்திணர்களாக கலந்துகொண்ட மூத்த கலைஞர்களும் , வடமராட்சி வடக்கு கலாசார பேரவை உறுப்பினர்களுமான  இ. ஆழ்வாப்பிள்ளை,  ஆ.வடிவேல் உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.

தமிழ்தாய் வாழ்த்தினை   ஞான சம்மந்தர் கலா மன்றத்தினரின் வாத்திய சங்கமம்,  இடம் பெற்றது. அதனை தொடர்ந்து வரவேற்பு உரையினை பிரதி பிரதேச செயலர் பசுபதி தயானந்தன் நிகழ்த்தினார்.

வரவேற்பு நடனத்தினை ஞான சம்மந்தர் கலா மன்றத்தினர் வழங்கியதை தொடர்ந்து அரங்க திறப்புரையை திரு.இரவீந்தின் நிகழ்த்தினார். அபிநய கலாகேத்திர நடனாலயத்தின் தில்லானா நிகழ்வும், இடம் பெற்றது. 

தொடர்ந்து மறைந்த வடமராட்சி வடக்கு பிரதேச சலாசார உத்தியோகஸ்தர் கார்த்திகேயன் அவர்கள் நினைவாக அவரது குடும்பத்திற்க்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து கலைக்கோயிப் கலாமன்றத்துனரின் கிராமிய இசை நிகழ்வும், சிறப்பு விருந்தினர்கள், உரைகளும், செம்பருத்தி இதழ் 2 ம் வெளியீடு இடம் பெற்றது. இதில் வெளியீட்டு உரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் சொல்லடைவு ச.லலீசன் நிகழ்த்தியதை தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது.

நெடியாகாடு கலாமன்றத்தின் மயில் நடனம், இடம் பெற்றதை தொடர்ந்து  இளங்கலைஞர்,  இளங் கலைப்பரிதி ஆகிய விருதுகள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.


பரத சிவாலய கலாமன்றத்தின் தாருகாவனம் நாட்டிய நாடகமும், இடம் பெற்றதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட சாதனையாளர்களுக்கான  கலைப்பருதி விருதும், வழங்கிவைக்கப்பட்டதை தொடர்ந்து பிரதம விருந்தினரான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராசா அவர்களது பிரதம விருந்தினர் உரை இடம் பெற்றது. தொடர்ந்து அரிச்சந்திரா மயான காண்டம் நாடகமும் இடம் பெற்றது.



குறித்த நிகழ்வுகள் பருத்தித்துறையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச கலைஞர்கள், பரிதேச மக்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச மக்கள் என் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா. வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று 16/10/2024 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், தலமையில் மிக மிக சிறப்பாக இடம் பெற்றது.இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பருத்தித்துறை ஓராம் கட்டை சந்தியிலிருந்து விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர் அவர்களை  தொடர்ந்து மாணவர்கள், பிரதேச கலைஞர்களின் இன்னியம்,  சிலம்பம், காவடி, கரகம், தவில், உடுக்கடி என்பன இடம் பெற்றதனை தொடர்ந்து கடல்வளம், பனை வளம், தமிழரின் பாரம்பரியம், தொல்பொருள் சின்னங்கள், விவசாயம் போன்ற ஊர்திகளும் காட்சிக்கு பவனியாக வந்தன. அணிவகுப்புக்கள் விழா மண்டபம் வரை சென்றை அடுத்து மங்கல சுடர்கள் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தருமான சிறி சற்குணராசா, நிகழ்வின் தலைவரும்,  வடமராட்சி வடக்கு பிரதேச செயலருமான  சிவபாதசுந்தரம் சத்தியசீலன்,  சிறப்பு விருந்தினர்களான பிரதி பிரதேச செயலர்  பசுபதி தயானந்தன்,   நிகழ்வின் வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் சு.சுபாஸ்கரன்,  யாழ்மாவட்ட செயலக சிரேஸ்ட கலாசா உத்தியோகத்தர் திருமதி க. விஜயரத்தினம், நிகழ்வின் கௌரவ விருந்திணர்களாக கலந்துகொண்ட மூத்த கலைஞர்களும் , வடமராட்சி வடக்கு கலாசார பேரவை உறுப்பினர்களுமான  இ. ஆழ்வாப்பிள்ளை,  ஆ.வடிவேல் உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.தமிழ்தாய் வாழ்த்தினை   ஞான சம்மந்தர் கலா மன்றத்தினரின் வாத்திய சங்கமம்,  இடம் பெற்றது. அதனை தொடர்ந்து வரவேற்பு உரையினை பிரதி பிரதேச செயலர் பசுபதி தயானந்தன் நிகழ்த்தினார்.வரவேற்பு நடனத்தினை ஞான சம்மந்தர் கலா மன்றத்தினர் வழங்கியதை தொடர்ந்து அரங்க திறப்புரையை திரு.இரவீந்தின் நிகழ்த்தினார். அபிநய கலாகேத்திர நடனாலயத்தின் தில்லானா நிகழ்வும், இடம் பெற்றது. தொடர்ந்து மறைந்த வடமராட்சி வடக்கு பிரதேச சலாசார உத்தியோகஸ்தர் கார்த்திகேயன் அவர்கள் நினைவாக அவரது குடும்பத்திற்க்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து கலைக்கோயிப் கலாமன்றத்துனரின் கிராமிய இசை நிகழ்வும், சிறப்பு விருந்தினர்கள், உரைகளும், செம்பருத்தி இதழ் 2 ம் வெளியீடு இடம் பெற்றது. இதில் வெளியீட்டு உரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் சொல்லடைவு ச.லலீசன் நிகழ்த்தியதை தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது.நெடியாகாடு கலாமன்றத்தின் மயில் நடனம், இடம் பெற்றதை தொடர்ந்து  இளங்கலைஞர்,  இளங் கலைப்பரிதி ஆகிய விருதுகள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.பரத சிவாலய கலாமன்றத்தின் தாருகாவனம் நாட்டிய நாடகமும், இடம் பெற்றதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட சாதனையாளர்களுக்கான  கலைப்பருதி விருதும், வழங்கிவைக்கப்பட்டதை தொடர்ந்து பிரதம விருந்தினரான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராசா அவர்களது பிரதம விருந்தினர் உரை இடம் பெற்றது. தொடர்ந்து அரிச்சந்திரா மயான காண்டம் நாடகமும் இடம் பெற்றது.குறித்த நிகழ்வுகள் பருத்தித்துறையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச கலைஞர்கள், பரிதேச மக்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச மக்கள் என் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement