• May 20 2024

தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக மன்னாரில் பல்வேறு துறைகள் பாதிப்பு!SamugamMedia

Sharmi / Mar 15th 2023, 12:26 pm
image

Advertisement

நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்றைய தினம்(15)  முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள.

குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் பல பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன்  பரீட்சை நடவடிக்கைகளும் பிற்போடப்பட்டுள்ளது.


 அதே நேரம், இலங்கை ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட ஆசிரியர்களும் பூரண ஆதரவு வழங்கியிருந்தனர்

சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்த நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு வராமையினால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்ப சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதே நேரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்களும் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது.

வங்கி ஊழியர்கள் பகிஷ்கரிப்பு காரணமாக வங்கி சேவைகளும் இடம்பெறவில்லை. 

புகையிரத ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக புகையிரத சேவை இடம்பெற்று வருகின்றதுடன் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக மன்னாரில் பல்வேறு துறைகள் பாதிப்புSamugamMedia நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்றைய தினம்(15)  முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள.குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் பல பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன்  பரீட்சை நடவடிக்கைகளும் பிற்போடப்பட்டுள்ளது. அதே நேரம், இலங்கை ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட ஆசிரியர்களும் பூரண ஆதரவு வழங்கியிருந்தனர்சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்த நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு வராமையினால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்ப சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. அதே நேரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்களும் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது.வங்கி ஊழியர்கள் பகிஷ்கரிப்பு காரணமாக வங்கி சேவைகளும் இடம்பெறவில்லை. புகையிரத ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக புகையிரத சேவை இடம்பெற்று வருகின்றதுடன் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement