• Nov 22 2024

ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வற் வரி- கடும் நெருக்கடியில் சுகாதார துறை! Samugammedia

Tamil nila / Dec 16th 2023, 9:11 pm
image

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வற் வரி அதிகரிப்பினால் சுகாதாரத் துறை கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் ஊன்று கோலுக்குக் கூட இந்த வரிகள் பொருந்தும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரையில் வரி அறவிடப்படாத சுகாதாரத் துறைக்கு சொந்தமான பல பொருட்களுக்கு இந்த 18 வீத புதிய வரி அறவிடப்பட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலி, மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள், செவிப்புலன் கருவிகள் என அனைத்து உபகரணங்களுக்கும் ஜனவரி முதல் இந்த புதிய வரி விதிக்கப்படும்.

சுகாதாரத் துறைக்கு தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் அது மிகவும் பாரிய பிரச்சினையை உருவாக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளினால் நாட்டு மக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ள அரசாங்கமே மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வற் வரி- கடும் நெருக்கடியில் சுகாதார துறை Samugammedia எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வற் வரி அதிகரிப்பினால் சுகாதாரத் துறை கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் ஊன்று கோலுக்குக் கூட இந்த வரிகள் பொருந்தும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இதுவரையில் வரி அறவிடப்படாத சுகாதாரத் துறைக்கு சொந்தமான பல பொருட்களுக்கு இந்த 18 வீத புதிய வரி அறவிடப்பட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலி, மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள், செவிப்புலன் கருவிகள் என அனைத்து உபகரணங்களுக்கும் ஜனவரி முதல் இந்த புதிய வரி விதிக்கப்படும்.சுகாதாரத் துறைக்கு தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் அது மிகவும் பாரிய பிரச்சினையை உருவாக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இவ்வாறான நடவடிக்கைகளினால் நாட்டு மக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ள அரசாங்கமே மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement