• Nov 14 2024

வடக்கு மாகாண வலைப்பந்தாட்ட போட்டிகளில் வவுனியா சைவப்பிரகாச சாதனை..!

Sharmi / Aug 17th 2024, 5:15 pm
image

வடமாகாண ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில் 20 வயதின் கீழ் பிரிவில் , வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி முதலாம் இடத்தையும், உடுவில் மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தையும், மானிப்பாய் மகளிர் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

அத்துடன் 18வயதுப் பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டியில் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி முதலாமிடத்தையும், பரந்தன் இந்து மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும், அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

உடுவில் மகளிர் கல்லூரியின் 200வது ஆண்டு விழாவை முன்னிட்டு குறித்த போட்டிகளின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இன்றையதினம்(17) உடுவில் மகளிர் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில், விருந்தினர்களாக வலிகாமம் வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் செந்தில் குமரன், உடுவில் மகளிர் கல்லூரியின் ஆன்மீக குரு ரெப.லிங்கேசன், உடுவில் மகளிர் கல்லூரியின் விளையாட்டு செயலாளர் ப.தர்மகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

வடக்கு மாகாண வலைப்பந்தாட்ட போட்டிகளில் வவுனியா சைவப்பிரகாச சாதனை. வடமாகாண ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில் 20 வயதின் கீழ் பிரிவில் , வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி முதலாம் இடத்தையும், உடுவில் மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தையும், மானிப்பாய் மகளிர் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.அத்துடன் 18வயதுப் பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டியில் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி முதலாமிடத்தையும், பரந்தன் இந்து மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும், அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.உடுவில் மகளிர் கல்லூரியின் 200வது ஆண்டு விழாவை முன்னிட்டு குறித்த போட்டிகளின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இன்றையதினம்(17) உடுவில் மகளிர் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது.பாடசாலை அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில், விருந்தினர்களாக வலிகாமம் வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் செந்தில் குமரன், உடுவில் மகளிர் கல்லூரியின் ஆன்மீக குரு ரெப.லிங்கேசன், உடுவில் மகளிர் கல்லூரியின் விளையாட்டு செயலாளர் ப.தர்மகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement