• Nov 27 2024

வவுனியாவில் நகரசபை செயலாளரின் அதிரடியால் பாதை மீட்பு..!!

Tamil nila / Jan 29th 2024, 7:01 pm
image

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனிநபரால் ஆக்கிரமிப்பில் இருந்த வவுனியா நாகரசபைக்கு சொந்தமான வீதி மீட்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,,

வவுனியா திருநாவற்குளம் RDS வீதி, இரண்டாம் ஒழுங்கையின் ஒரு பகுதி தனிநபர் ஒருவரினால் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக வீதியின் ஒரு பகுதியை வழிமறித்து கொட்டகை அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

 

இது தொடர்பாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா நகரசபையின் செயலாளர் இ.தயாபாரன் அவர்கள் குறித்த தனிநபருக்கு அறிவித்தல் வழங்கியும் அந்நபரால் வீதி பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்படவில்லை.

 

இதனை தொடர்ந்து நகரசபையினர் அதிரடியாக செயல்பட்டு குறித்த வீதியில் தனிநபரால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையை அகற்றப்பட்டு அக்கொட்டகையினை நகரசபையினர் கையகப்படுத்தி உள்ளனர். 


நகரசபை செயலாளரின் இந்த செயல்பாட்டிற்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பை வழங்கியிருந்தனர்.

 

இதேவேளை குறித்த செயலாளரினால் கடந்த காலங்களில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்த தெற்கிழுப்பைக்குளம், வைரவர்புளியங்குளம், குடியிருப்பு பகுதிகளில் இருந்த மூன்று வீதிகள் ஏற்கனவே மீட்டெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நகரசபை செயலாளரின் அதிரடியால் பாதை மீட்பு. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனிநபரால் ஆக்கிரமிப்பில் இருந்த வவுனியா நாகரசபைக்கு சொந்தமான வீதி மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,,வவுனியா திருநாவற்குளம் RDS வீதி, இரண்டாம் ஒழுங்கையின் ஒரு பகுதி தனிநபர் ஒருவரினால் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக வீதியின் ஒரு பகுதியை வழிமறித்து கொட்டகை அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா நகரசபையின் செயலாளர் இ.தயாபாரன் அவர்கள் குறித்த தனிநபருக்கு அறிவித்தல் வழங்கியும் அந்நபரால் வீதி பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து நகரசபையினர் அதிரடியாக செயல்பட்டு குறித்த வீதியில் தனிநபரால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையை அகற்றப்பட்டு அக்கொட்டகையினை நகரசபையினர் கையகப்படுத்தி உள்ளனர். நகரசபை செயலாளரின் இந்த செயல்பாட்டிற்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பை வழங்கியிருந்தனர். இதேவேளை குறித்த செயலாளரினால் கடந்த காலங்களில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்த தெற்கிழுப்பைக்குளம், வைரவர்புளியங்குளம், குடியிருப்பு பகுதிகளில் இருந்த மூன்று வீதிகள் ஏற்கனவே மீட்டெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement