• Nov 23 2024

வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்ற வேதநாயகன்..!

Sharmi / Sep 27th 2024, 10:28 am
image

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநராக இன்றையதினம்(27) தமது கடமைகளை நா.வேதநாயகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் அச்சப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்வதற்குரிய ஒருவர் என்பதை தெரிவிப்பதோடு, இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன்.

மேலும், இந்த இடத்தில் வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கவும் மாட்டாது. வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன் என்றும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

மிகவும் எளிமையான முறையில் இன்றைய தினம்(27) ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் சர்வ மத தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்ற வேதநாயகன். ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.வடக்கு மாகாண ஆளுநராக இன்றையதினம்(27) தமது கடமைகளை நா.வேதநாயகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் அச்சப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்வதற்குரிய ஒருவர் என்பதை தெரிவிப்பதோடு, இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன்.மேலும், இந்த இடத்தில் வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கவும் மாட்டாது. வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன் என்றும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.மிகவும் எளிமையான முறையில் இன்றைய தினம்(27) ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் சர்வ மத தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement