• May 02 2024

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் முற்றாக அழிப்பு! SamugamMedia

Sharmi / Mar 26th 2023, 2:08 pm
image

Advertisement

வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர்  ஆலயத்தில் மலை உச்சியில் காணப்பட்ட சிவலிங்கம் அருகிலுள்ள பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சூலங்கள் மற்றும் அம்மன்,  பிள்ளையார் சிலைகளும் காணாமல் போயுள்ளதுடன் சிலைகள் வைக்கப்பட்ட இடங்கள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.


இன்று(26) காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் வழிபடச் சென்ற போதே குறித்த ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.



அதேவேளை குறித்த ஆலயத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் விஜயம் மேற்கொண்டதுடன், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் எனவும் குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையில் அனைவரின் செயற்பாடுகள் அமைவது அவசியம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் முற்றாக அழிப்பு SamugamMedia வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர்  ஆலயத்தில் மலை உச்சியில் காணப்பட்ட சிவலிங்கம் அருகிலுள்ள பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சூலங்கள் மற்றும் அம்மன்,  பிள்ளையார் சிலைகளும் காணாமல் போயுள்ளதுடன் சிலைகள் வைக்கப்பட்ட இடங்கள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.இன்று(26) காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் வழிபடச் சென்ற போதே குறித்த ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.அதேவேளை குறித்த ஆலயத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் விஜயம் மேற்கொண்டதுடன், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் எனவும் குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையில் அனைவரின் செயற்பாடுகள் அமைவது அவசியம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement