• Jan 07 2025

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!

Chithra / Jan 6th 2025, 8:02 am
image


நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே மழையின் தாக்கத்தால் மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர். 

எனினும் கெப்பெட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 


மரக்கறிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை அநுராதபுரம் - மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள திறப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று அங்கு விஜயம் மேற்கொண்ட போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

பொருளாதார மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த பொருளாதார மத்திய நிலையத்தை மீள திறக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சருக்கு இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.


நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.இதனிடையே மழையின் தாக்கத்தால் மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர். எனினும் கெப்பெட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மரக்கறிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதேவேளை அநுராதபுரம் - மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள திறப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று அங்கு விஜயம் மேற்கொண்ட போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பொருளாதார மத்திய நிலையத்தை மீள திறக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சருக்கு இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement