அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் நேற்றிரவு முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டி புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதியின் நடுவே நாய் ஒன்று குறுக்கிட்டதால், எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த 12 வயது சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 வயது சிறுவனுக்கு எமனான நாய் - இலங்கையில் நடந்த துயரம் அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் நேற்றிரவு முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முச்சக்கரவண்டி புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதியின் நடுவே நாய் ஒன்று குறுக்கிட்டதால், எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த 12 வயது சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுவனின் சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.