• Nov 22 2024

ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதி..!

Chithra / May 6th 2024, 1:13 pm
image

 

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள், மாகாண அரச அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு வரி செலுத்தும் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீட்டிக்கப்பட்டு, பின்னர் 60 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காலகட்டத்தில் 65 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு இந்தக் கடமைச் சலுகை வழங்கப்பட உள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பிரதீப் அசரத்னவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வரியில்லா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்குமாறு 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதி.  ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள், மாகாண அரச அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு வரி செலுத்தும் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீட்டிக்கப்பட்டு, பின்னர் 60 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காலகட்டத்தில் 65 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு இந்தக் கடமைச் சலுகை வழங்கப்பட உள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பிரதீப் அசரத்னவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, வரியில்லா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்குமாறு 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement