• Feb 05 2025

சுதந்திரதினத்திற்கு ஆதரவாக வவுனியாவில் வாகன பேரணி

Chithra / Feb 4th 2025, 12:02 pm
image


 இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை இணைத்து வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்தகர மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர்  காஞ்ச ஆகியோரால் குறித்த பேரணியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பேரணியானது  வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்று, பஜார் வீதியின் ஊடாக வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக முடிவடைந்திருந்தது. 

இதேவேளை குறித்த பேரணியில் கலந்து கொண்ட வாகனங்கள் அனைத்திலும் தேசியக்கொடி கட்டப்பட்டு, மூவின மக்களின்  கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நடனங்கள் இடம்பெற்றதுடன், நாடோடிகளும், விசேட தேவைக்குட்பட்டவர்களும் கலந்து கொண்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது. 


சுதந்திரதினத்திற்கு ஆதரவாக வவுனியாவில் வாகன பேரணி  இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை இணைத்து வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்தகர மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர்  காஞ்ச ஆகியோரால் குறித்த பேரணியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.இப்பேரணியானது  வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்று, பஜார் வீதியின் ஊடாக வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக முடிவடைந்திருந்தது. இதேவேளை குறித்த பேரணியில் கலந்து கொண்ட வாகனங்கள் அனைத்திலும் தேசியக்கொடி கட்டப்பட்டு, மூவின மக்களின்  கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நடனங்கள் இடம்பெற்றதுடன், நாடோடிகளும், விசேட தேவைக்குட்பட்டவர்களும் கலந்து கொண்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது. 

Advertisement

Advertisement

Advertisement