• May 17 2024

இலங்கையில் வாகனத் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு..! samugammedia

Chithra / Jun 6th 2023, 10:38 am
image

Advertisement

பொசன் வாரம் ஆரம்பிக்கப்பட்ட 3 நாட்களில் நாடளாவிய ரீதியாக வாகனத் திருட்டு, கொள்ளை மற்றும் சொத்தை அபகரித்தல் போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வீடுகளை உடைத்து களவாடுதல் மற்றும் சொத்துக்களை அபகரித்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.

இதுதவிர, வாகன கொள்ளை தொடர்பில் நாடளாவிய ரீதியாக உள்ள பல காவல்துறை நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உடனடி கடன் வழங்குவதாக கூறி இணையத்தளம் ஊடாக அறிவித்தல்களை விடுத்து, லட்சக்கணக்கான நிதியை மோசடி செய்த ஒருவர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, கெஸ்பேவ, ராகமை, வெயங்கொடை, கேகாலை, அநுராதப்புரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து அவருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சந்தேகத்துக்குரியவர் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் கந்தானை பகுதியைச் சேர்ந்தவராவார்.

கைதானவரிடம் இருந்து 74 சிம் அட்டைகள், 4 கையடக்க தொலைபேசிகள், என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


இலங்கையில் வாகனத் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு. samugammedia பொசன் வாரம் ஆரம்பிக்கப்பட்ட 3 நாட்களில் நாடளாவிய ரீதியாக வாகனத் திருட்டு, கொள்ளை மற்றும் சொத்தை அபகரித்தல் போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.வீடுகளை உடைத்து களவாடுதல் மற்றும் சொத்துக்களை அபகரித்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.இதுதவிர, வாகன கொள்ளை தொடர்பில் நாடளாவிய ரீதியாக உள்ள பல காவல்துறை நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, உடனடி கடன் வழங்குவதாக கூறி இணையத்தளம் ஊடாக அறிவித்தல்களை விடுத்து, லட்சக்கணக்கான நிதியை மோசடி செய்த ஒருவர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு, கம்பஹா, கெஸ்பேவ, ராகமை, வெயங்கொடை, கேகாலை, அநுராதப்புரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து அவருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சந்தேகத்துக்குரியவர் கைது செய்யப்பட்டார்.கைதானவர் கந்தானை பகுதியைச் சேர்ந்தவராவார்.கைதானவரிடம் இருந்து 74 சிம் அட்டைகள், 4 கையடக்க தொலைபேசிகள், என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement